Home » Archives by category » Poraali Polambals

கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வருவதனால், மின் இணைப்பை துண்டித்து இரண்டு வருடங்களாக இருளில் வாழும் போராளி

Comments Off on கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வருவதனால், மின் இணைப்பை துண்டித்து இரண்டு வருடங்களாக இருளில் வாழும் போராளி

சென்னை: கூடங்குளத்தில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக சில ஆண்டுகள் முன்பு மாபெரும் போராட்டங்கள் நடந்து வந்தது. இதற்க்கு இணையம் மூலம் ஆதரவு அளித்து வந்த போராளி இன்றோ இருளிலே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அவரை அவரது வீட்டுவாசலில் சந்தித்தோம். எங்களை வரவேற்று வீட்டினுள்ளே அழைத்து சென்றார். “மின் இணைப்பை துண்டிக்க கோரி நான் இரண்டு வருடங்கள் முன்பு மனு கொடுத்தேன். அன்றிலிருந்து, எங்கள் முப்பாட்டன்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையில வாழறேன். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து ஊற்ற தானியங்கி கிடையாது, […]

Continue reading …

தமிழக சட்டசபை மேசைகளில் மோடியின் உருவம் தென்பட்டதால் பரபரப்பு

Comments Off on தமிழக சட்டசபை மேசைகளில் மோடியின் உருவம் தென்பட்டதால் பரபரப்பு

சென்னை:  மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழக சட்டசபை நேற்று கூடியது. முதலில், உள்ளே நுழைந்த திமுகவினரின் கண்களிலே பல மேசைகளில் மோடியின் உருவம் தென்பட்டதினால் அவ்விடமே பரபரப்பானது. கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் முதல்வர் அவர்கள் பெருன்பான்மையை நிரூபித்தார். அப்பொழுது, பெரும் அமளி ஏற்பட்டு, எதிர்க்கட்சி தலைவரின் சட்டையெல்லாம் கிழிந்தது. அதற்குப்பின் நேற்று தான் சட்டசபை கூடியது. முதலில் உள்ளே நுழைந்த திமுகவினர், சிறிது நேரத்திலேயே அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். அங்கே காவலில் இருந்த ஓர் அதிகாரி […]

Continue reading …

பிளாஸ்டிக் அரிசிக்கு மத்திய அரசு தடை; பிளாஸ்டிக் அரிசி உண்ணும் போராட்டத்தை தமிழக போராளிகள் ஆரம்பித்தனர்

Comments Off on பிளாஸ்டிக் அரிசிக்கு மத்திய அரசு தடை; பிளாஸ்டிக் அரிசி உண்ணும் போராட்டத்தை தமிழக போராளிகள் ஆரம்பித்தனர்

சென்னை: ஆந்திரா மூலமாக தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி ஊடுருவி வந்ததாக வந்த தகவலையடுத்து தமிழகமெங்கும் பிளாஸ்டிக் அரிசியை பற்றி பரவலாக பேசிவருகின்றனர். இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் அரிசிக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழகமெங்கும், பிளாஸ்டிக் அரிசிக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. முதலாவதாக, சென்னை ஐஐடி வாசலில் இருபத்திமூன்றாம் ஆண்டு மேற்படிப்பு பயிலும் இளம் மாணவர்கள் போராடினர். நடுசாலையில் பானை அமைத்து, அதிலே பிளாஸ்டிக் அரிசியை பொங்கி, அனைவரும் உண்டு […]

Continue reading …

ஜல்லிக்கட்டில் காளைகளை விரட்டினால்தான் அதன் கறியில் புரதசத்து அதிகமாகும் – உள்ளூர் விஞ்ஞானி பளீர்

Comments Off on ஜல்லிக்கட்டில் காளைகளை விரட்டினால்தான் அதன் கறியில் புரதசத்து அதிகமாகும் – உள்ளூர் விஞ்ஞானி பளீர்

அலங்காநல்லூர்: மத்திய அரசு  காளை,மாடு, எருமை மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகளை, தகுந்த சான்றிதழின்றி சந்தையில் விற்க முடியாதவாறு புதிய சட்டத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சுருக்கமாக, ‘மாட்டுக்கறி தடை’ எனக்கூறி நம்மூரில் வழக்கம்ப்போல போராளிகள் தங்கள் ஒரே தொழிலான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். இதன் ஒரு பங்காக, ஜல்லிக்கட்டிற்கு பெயர்ப்போன அலங்காநல்லூரில் போராட்டம் வெடித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ‘காளைகள் எங்கள் வீட்டு பிள்ளை’ என்று கூறி போராடிய அதே போராளிகள்தான் இன்று காளைகளை அறுத்து உண்ணவேண்டும் […]

Continue reading …

சென்னை: போராட்டங்கள் நிறைந்த அகம் ஆகிவிட்டது தமிழகம். அனுதினம் ஆர்ப்பாட்டம், பொழுது விடிந்தால் போராட்டம் என மாறியிருக்கும் தமிழகத்தின் இன்றைய நிலைக்கான காரணத்தை அறிய புறப்பட்டோம். சென்னை மெரினாவில் இருந்த ஒரு போராட்ட குழுவினை சந்தித்தோம், “நாம் எதற்காக போராடுகிறோம் என்பது முக்கியமில்லை. தெரியவேண்டிய அவசியமுமில்லை. ஆனால், போராடுவோம். போராடிக்கொண்டே இருப்போம்.” என்று உரக்க பேசினார் அந்த போராளி. ‘மிக்க மகிழ்ச்சி, ஆனால், தமிழக அரசை எதிர்த்து நீங்கள் போராடாமல் இருப்பது ஏன்’ என்று நாங்கள் கேள்வி எழுப்பியதும் […]

Continue reading …

மத்திய அரசு கொண்டுவந்த இலவச வைஃபையை எதிர்த்து எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் போராட்டம்

Comments Off on மத்திய அரசு கொண்டுவந்த இலவச வைஃபையை எதிர்த்து எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் போராட்டம்

சென்னை: எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இன்று பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘வீரத்தமிழ் இயக்கம்’,’அனுதினம் போராட்டம்’ மற்றும் பல தமிழ் போராளிகள் சார்ந்த இயக்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். எப்பொழுதும் போராட்டம் என்றால் இரயில் மறியல் நடைப்பெறும், ஆனால், நூதன போராட்டமாக, நடைமேடையில் மட்டுமே இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்குபெற்ற ஓர் அமைப்பின் தலைவரிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “மத்திய இரயில் மந்திரி சுரேஷ் பிரபு அவர்கள் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தவர், […]

Continue reading …