ஜல்லிக்கட்டில் காளைகளை விரட்டினால்தான் அதன் கறியில் புரதசத்து அதிகமாகும் – உள்ளூர் விஞ்ஞானி பளீர்

அலங்காநல்லூர்: மத்திய அரசு  காளை,மாடு, எருமை மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகளை, தகுந்த சான்றிதழின்றி சந்தையில் விற்க முடியாதவாறு புதிய சட்டத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சுருக்கமாக, ‘மாட்டுக்கறி தடை’ எனக்கூறி நம்மூரில் வழக்கம்ப்போல போராளிகள் தங்கள் ஒரே தொழிலான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

Madurai-alanganallur-jallikattu

சீறி வரும் காளையை அடக்குவது ஒருவர், ஆனால், அதையே அறுத்து ருசிப்பது பலர்.”

இதன் ஒரு பங்காக, ஜல்லிக்கட்டிற்கு பெயர்ப்போன அலங்காநல்லூரில் போராட்டம் வெடித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ‘காளைகள் எங்கள் வீட்டு பிள்ளை’ என்று கூறி போராடிய அதே போராளிகள்தான் இன்று காளைகளை அறுத்து உண்ணவேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை வழிநடத்தி வந்தவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், “மாட்டுக்கறி தடை என்பது மத்தியில் ஆளும் மோடி அரசின் சதி. பெரியார் பிறந்த இம்மண்ணில் இந்துத்தவா எனும் நச்சினை பரப்ப நினைக்கும் அவர்களது அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முட்டுக்கட்டை போடுவோம். நாங்கள் என்ன சாப்பிட்டால் என்ன? அதை தட்டி கேட்க இவர்கள் யார்?” என முழங்கினார்.

‘மாட்டுக்கறி என்றால் பசு மட்டும் அல்ல, அதில் காளைகள், எருமைகள் கூட இருக்கின்றனவே’ என நாங்கள் கூறியதற்கு, “நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. சில மாதங்கள் முன்பு காளை எங்கள் வீட்டு பிள்ளை எனக்கூறிய இவர்கள் இன்று அதனை புசிக்க வேண்டும் எனப் போராடுகிறார்கள் என்று தானே? அதற்க்கு காரணம்க்கூற எங்கள் வில்லேஜ் விஞ்ஞானி இருக்கிறார்” என்று ஒருவரை அழைத்தார்.

அந்த உள்ளூர் விஞ்ஞானி கூறுகையில், “மனிதர்கள் மாமிசம் உண்ண காரணம் அதில் இருக்கும் புரதச்சத்து. பார்ப்பனர்களைப்போல வசதியாக பருப்பும் நெய்யும் கிடைக்காத எங்கள் மாற்றுமத சகோதரர்களுக்கு சிறிய தட்டில் பெரிய புரதச்சத்து கிடைக்க ஒரே வழி மாட்டுக்கறி தான். எந்த ஒரு மிருகத்திற்கும் எவ்வளவு ஓட்டம் இருக்கிறதோ, அவ்வளவு புரதச்சத்து அதன் தசைகளில் உருவாகும். “

“ஜல்லிக்கட்டு என்கிற காளை விரட்டு நடக்கும் சமயத்தில், காளை மாட்டினை நமது இளைஞர்கள் சீறிப் பாய்ந்து பிடிக்க நினைக்கையில், அவை தலைதெறிக்க ஓடுகிறதல்லவா? அப்பொழுது அதன் தசைகளில் புரதச்சத்து பீறிட்டு எழும். அப்படிப்பட்ட மாட்டுக்கறியை ஐந்தாயிரம் வருடங்களாக புசித்து வந்த எங்கள் மாற்றுமத தமிழர்களுக்கு வயிற்றில் அடிக்கும் வகையில் பிராமண மத்திய அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. சிறுபான்மையினரை மறைமுகமாக துன்புறுத்துவதில் இந்த பாசிச அரசுக்கு அத்தனை மகிழ்ச்சி.”

“அதற்கும் நாங்கள் வைத்தோம் தடை. எங்கள் காளையர்கள் போராட்டம் நடத்தி மோடி அரசை பணியவைத்து, இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்தி காண்பித்தோம். கடந்த நான்கு மாதங்கள் நடந்த ஜல்லிக்கட்டுகளில் ஓடிய காளைகளின் உடம்பில் இப்பொழுது அதீத புரதச்சத்து இருக்கும். அதனை இன்றே வெட்டி உண்டு மற்றும் எங்கள் மாற்றுமத சகோதரர்களுக்கு உணவளித்து மகிழப்போகிறோம்.  இதனால், எங்கள் போராளிகளிடம் இன்னும் அதிகம் சக்தி வரும். அதனைக்கொண்டு, அந்த பார்ப்பனர்களின் சாதிகளை முறியடிப்போம்.” என உரக்க கூவினார் அந்த உள்ளூர் விஞ்ஞானி.