“மாநில அரசிற்கு எதிராக போராடினால் எங்களின் ஜட்டியை உருவிவிட்டு ஓடவிட்டுவிடுவார்கள், அதனால் மத்திய அரசை எதிர்த்து மட்டுமே போராட்டங்கள்” – போராளிகள்

Filed under: Arusuvai Arasiyal,Featured,Latest,Naatu Nadappu,Poraali Polambals |

சென்னை: போராட்டங்கள் நிறைந்த அகம் ஆகிவிட்டது தமிழகம். அனுதினம் ஆர்ப்பாட்டம், பொழுது விடிந்தால் போராட்டம் என மாறியிருக்கும் தமிழகத்தின் இன்றைய நிலைக்கான காரணத்தை அறிய புறப்பட்டோம்.

'பெட்ரோல் விலையை வேற குறைத்துவிட்டார்கள். இந்த நிலைமை நமக்கு வரக்கூடாதுன்னா, மோடியை மட்டும் திட்டுவோம்.' என சிரித்தார் ஓர் போராளி.

‘பெட்ரோல் விலையை வேற குறைத்துவிட்டார்கள். இந்த நிலைமை நமக்கு வரக்கூடாதுன்னா, மோடியை மட்டும் திட்டுவோம்.’ என சிரித்தார் ஓர் போராளி.

சென்னை மெரினாவில் இருந்த ஒரு போராட்ட குழுவினை சந்தித்தோம், “நாம் எதற்காக போராடுகிறோம் என்பது முக்கியமில்லை. தெரியவேண்டிய அவசியமுமில்லை. ஆனால், போராடுவோம். போராடிக்கொண்டே இருப்போம்.” என்று உரக்க பேசினார் அந்த போராளி.

‘மிக்க மகிழ்ச்சி, ஆனால், தமிழக அரசை எதிர்த்து நீங்கள் போராடாமல் இருப்பது ஏன்’ என்று நாங்கள் கேள்வி எழுப்பியதும் எங்களை சற்று அப்புறப்படுத்தி பேசினார். “அதாவது தம்பி! முதல்வன் படம் பார்த்துருப்பீங்க. அதுல நடிச்ச அர்ஜுன் தம்பி மாநில அரச எதிர்த்து செயல்பட்டதுக்கு நடுரோட்டுல ஜட்டிய உருவிவிட்டு ஓடவிட்டுட்டானுங்க. அதுமட்டுமா, சாக்கடைலலாம் குதிக்க வெச்சிட்டாங்க. அதாகப்பட்டது, மாநில அரசிடம் வம்பு வெச்சுகிட்டா நம்ம கதியும் அதே தான்.”

“ஜல்லிக்கட்டு போராட்டம் சமயத்துல மோடியை மட்டும் திட்டிகிட்டே இருந்திருந்தா இன்னும் ஒரு மாசம் கூட போராடியிருக்கலாம். ஆனால், அவசரப்பட்டு சில வீணாப்போனவனுங்க, மாநில அரச விமர்சித்து தொலைச்சுட்டாங்க. அதுல தான் எங்க ஆளுங்க கல்லடி பட்டு, தப்பித்தோம் பிழைத்தோம்னு ஓடி வரவேண்டியாகிருச்சு. இனிமே, அந்த தப்ப நாங்க யாரும் செய்ய மாட்டோம். மத்திய அரசையும் மோடியையும் மட்டும் திட்டியே பெரிய ஆளு ஆகிடலாம், இதுல போய் தேவையில்லாம ஏன் மாநில அரச இழுக்கனும்? நாங்க நல்லா இருக்கிறது பிடிக்கலையா.” என்று எங்களை பார்த்து நாக்கை மடக்கி சைகை செய்தார் அந்த போராளி.

நாங்கள் கிளம்புகையில் அங்கு இருந்த ஒரு இளம் போராளி எங்களை பார்த்து கூறினார், “அவர்களாவது ஜட்டி போட்டிருக்கிறார்கள். நான் கடற்கரை காற்றை அனுபவிக்க உள்ள எதுவுமே போடாம வேற வந்திருக்கேன்.” கூட்டம் பக்கம் திரும்பி, “கோட்டையில் இருக்கும் மோடியே, வெளியே வா தாடியே” என முழங்கினார்.

 

One Response to “மாநில அரசிற்கு எதிராக போராடினால் எங்களின் ஜட்டியை உருவிவிட்டு ஓடவிட்டுவிடுவார்கள், அதனால் மத்திய அரசை எதிர்த்து மட்டுமே போராட்டங்கள்” – போராளிகள்

  1. Tasteless one.. When a typical bhakt tries to write satire and fails miserably.

    BeefEater
    April 2, 2017 at 12:36 pm